மே 6-ந்தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை

 
Srirangam

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மே 6-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் விருப்பன் திருநாளாக 11 நாட்கள் நடைபெறுகிறது. ரங்கநாதர் பிறந்தது சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டியே சித்திரை ரேவதியில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

Srirangam

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விருப்பன் திருநாள் விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், யாளி வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருடவாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மே 6-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Local-holiday

திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மே 6-ந்தேதி விடுமுறைக்கு பதிலாக ஜூன் மாதம் 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

From around the web