பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம்.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

 
Dindigul

திண்டுக்கல் அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

திண்டுக்கல் மாவட்டம் நொச்சியோடைபட்டி கிராமத்தைச் வசித்து வருபவர் முருகேசன். இவரது மகள் பிரியா (19). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கம்பத்தில் ஓர்க்சாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி 11-ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

suicide

இந்த நிலையில், பிரியாவுக்கு விருப்பம் இல்லாமல், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மறுவீடு அழைக்க செவ்வாய்க்கிழமை புதுமண தம்பதிகள் திண்டுக்கல் வருகை தந்துள்ளனர். 

செவ்வாய் இரவு தம்பதிகள் தனித்தனியே உறங்கிய நிலையில், புதன்கிழமை காலை பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் எழுந்தபோது கமலக்கண்ணன் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்துபோனார். 

Sanarpatti PS

பின் இதுகுறித்து சாணார்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, அதிகாரிகள் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடந்தி வருகின்றனர். திருமணமாகி 4 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web