திருமண ஆசைக்காட்டி பலமுறை பலாத்காரம்.. காதலி புகார்.. மாயமான காதலன் தற்கொலையா?

 
NIshanth

சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் இளம்பெண் சூர்யா (27). இவர் 10-ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் இவர்களின் காதல் தொடர்ந்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சிறிது சிறிதாக ரூ. 68 லட்சத்தை அந்த பெண்ணிடம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, நிஷாந்த் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தட்டி கழித்து வந்துள்ளார். 

Porur

இந்நிலையில், சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழில் அதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதை இப்படியோ அறிந்து கொண்ட அந்த இளம்பெண் இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையில் தொழில் அதிபர் மகளுடன் நிஷாந்துக்கு நேற்று நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, நிஷாந்த் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக நிஷாந்தின் பெற்றோரிடம் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிஇஓ மகளை திருமணம் செய்து ஏமாற்ற முயன்ற நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

Virugambakkam

உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாலியல் வழக்கு, பணமோசடி, திருமணம் நின்ற நிலையில் போரூர் ஏரியில் குதித்து நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, ஏரியில் இளைஞர் குதித்தாக கூறப்படுகிறது.

From around the web