விகடன் இணையத்தள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Mar 6, 2025, 12:01 IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கை மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது போல் பிரதமர் மோடியை சித்தரிக்கும் கேலிச்சித்திரப்படத்தை வெளியிட்ட விவகாரத்தில் ஆனந்த விகடன் பத்திரிக்கையின் இணையத்தளம் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து விகடன் குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இணையத்தள முடக்கத்தை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.