குறைந்த கொழுப்பு... கம்மி விலை... மார்ச் 1-ம் தேதி முதல் வருகிறது ஆவின் புதிய பால்!

 
Aavin

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ‘கவ் மில்க்’ என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Aavin

இந்த நிலையில் பால் தட்டுப்பாட்டை போக்க மார்ச் 1-ம் தேதி முதல் ‘கவ் மில்க்’ என்ற பெயரில் புதிய ரக பால் வகையை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஆவின் நிறுவனம் அந்த பாலின் கொழுப்பு அளவை 3.5 சதவிகிதமாக குறைத்து உற்பத்தி செய்யவுள்ளது. ஒரு லிட்டர் பால் 22.50 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது.

பால் தட்டுப்பாடு காரணமாக பச்சை நிற பாக்கெட்டுகளை குறைக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பச்சை நிற பாக்கெட்டுகளில் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருக்கும் நிலையில் தட்டுப்பாடுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Aavin

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் குறைவால் ஆவின் பால் தட்டுப்பாடு என தொடர் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web