சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

 
Madurai

சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று 2 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. அதனைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும். மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

School

இத்திருவிழாவின் உச்சபட்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, இன்று (ஏப்ரல் 23) அதிகாலை 5.51 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு இன்று (ஏப்ரல் 23) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 11-ம் தேதி வேலை நாளாக கருதப்படும். அதேபோல் 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, நாளை (ஏப்ரல் 24) நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

Local-holiday

அதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூல அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும். மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web