உயிர்கள் பலி.. மூச்சு விடாத விஜய்.. நிறுத்தப்படுமா பரப்புரைப் பயணம்?

 
Vijay Vijay

மூன்றாவது சனிக்கிழமையாக நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட நடிகர் விஜய் நிகழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியடையச் செய்யும் சோகம் நடந்துள்ளது. 33 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்ற நடிகர் விஜய் தரப்பிலிருந்து இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு வருத்தமோ, இரங்கலோ, அதிர்ச்சியையோ வெளிப்படுத்தும் வகையில் தகவல்கள் ஏதும் இல்லை. இந்த சம்பவத்திற்கும் திமுக அரசை எப்படி குறை சொல்லவேண்டும் என்ற உத்தரவுக்காக காத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை?

நிச்சயமாக நடிகர் விஜய் க்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எந்த ஒரு இயல்பான மனிதரும் தங்கள் அதிர்ச்சியை ஏதாவது ஒரு வகையில் தெரியப்படுத்தி விடுவார்கள். இப்படி ஓடி ஒளிய மாட்டார்கள். விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு தலைவரும் மருத்துவமனை பக்கம் கூட சென்றதாக தகவல்கள் இல்லை.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே மகாமகம் குளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தான் மிகவும் அதிகமானது. அதற்கு அடுத்ததாக கரூரில் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் நடந்துள்ளது உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது.

காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டதாலேயே இந்த உயிரிழப்புக்கள் என்று கூறப்படுகிறது. இனிமேலும் விஜய்க்கு இப்படி மக்கள் நெருக்கடி மிகுந்த  நடுத்தெருவில் பஸ் மீது நின்று கொண்டு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகிறது.

ஊருக்கு வெளியே பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமே விஜய் க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் உடனடிக் கருத்தாக உள்ளது.

From around the web