இந்த 2 நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது.. வெளியான முக்கிய அறிவிப்பு.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
Tasmac

சென்னையில் வரும் 25, 26 ஆகிய நாட்களில் மதுபான கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

TASMAC

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், சென்னையில் வரும் 25, 26 ஆகிய நாட்களில் மதுபான கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

TASMAC

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ம் தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

From around the web