கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.. சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!

 
TN Assembly

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கூடியது முதல் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. 

Resolution-Passed-in-TN-Assembly-Against-Karnataka

அப்போது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து சட்ட மசோதா முன்வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார்.

திருத்தப்பட்ட சட்டத்தின்படி, கள்ளச்சாராயம், விஷ சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு 10 லட்சம்  ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muthusamy

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web