தமிழர்கள் போலவே வட மாநிலத்தவர்களும் தெரிந்து கொள்ளட்டும்! முதலமைச்சர் அதிரடி!!

 
Stalin

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுகவினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தும் வருகின்றனர். இந்தி எழுத்துக்களை அழித்து விட்டால் வட மாநிலத்தவர்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள் என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!

தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!”என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.


 

From around the web