ஊட்டியில் உலாவரும் சிறுத்தைகள்... அச்சத்தில் மக்கள்!! வெளியான சிசிடிவி காட்சி

 
Ooty

நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு இரவில் இரண்டு சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் இருந்து அண்மைக்காலமாக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புகளின் அருகே உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

ooty

அந்த வகையில், உதகை அருகே உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளின் அருகே சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்டும் குடியிருப்புகளில் உள்ள செல்லப் பிராணிகளை வேட்டையாடி வருகின்றன.  சிறுத்தைகள் உலா வரும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் புகுந்த சிறுத்தை, நாயை வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

From around the web