மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்.. 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 
school

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் இன்று (ஏப்ரல் 4) 7 பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். நேற்று அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் அங்கு மீண்டு பதற்றம் அதிகரித்தது.

Leopard

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிக்கு இன்று (ஏப்ரல் 4) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கூறை நாடு பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

From around the web