‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை.. உசலம்பட்டியில் பரபரப்பு!

 
Usilampatti

உசிலம்பட்டியில் மது அருந்த பணம் தர மறுத்த தாயை மகன் கட்டையால் அடித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Murder

இந்த நிலையில் மூத்த மகன் நமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாய் தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். மது போதைக்கு அடிமையான நமகோடி அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாகமாக உயிரிழந்தார்.

Police

ரத்த வெள்ளத்தில் கிடந்த காசம்மாளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காசம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் நமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web