வடமாநில் தொழிலாளர் விவகாரம்... வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 
MKS

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

North Indians

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் திருப்பூரில் நடந்ததாக தொகுத்து தகவல் பரப்பப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். வதந்தி பரப்புவோர் மிது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனி உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

MKS

இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். 

சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது. வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
 

From around the web