வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா எச்சரிக்கை?

திமுக தரப்பில் கமல்ஹாசனை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதை வரவேற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தேமுதிகவுக்கு தரப்பட வேண்டிய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அன்புமணி ராமதாஸுக்கும், ஜி.கே.வாசனுக்கும் வழங்கிவிட்டார்கள், இந்த முறை தேமுதிகவுக்கு தரப்பட வேண்டும். தராவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார் பிரேமலதா.
மேலும் 234 தொகுதிகளுக்கும் தேமுதிகவில் தொகுதி பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து அதிமுகவுக்குள்ளேயே அதிருப்தி நிலவும் நிலையில் தேமுதிக அதிமுகவை கழட்டி விட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தேமுதிகவுக்கு எம்.பி. பதவி கொடுப்பாரா எடப்பாடி பழனிசாமி என்பதற்கான விடை விரைவில் தெரிந்து விடும்.