இதெல்லாம் வடக்கே வச்சிக்குங்க! அண்ணாமலைக்கு திருமாவளவன் எச்சரிக்கை?

 
திருமா

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தொடர்பான புதிய சர்ச்சையை அண்ணாமலை தொடங்கி வைத்துள்ளார். அதில் பங்கேற்ற ஆனந்த் டெல்டும்டே குறித்து நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்தவரின் தம்பி என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தமிழ்நாட்டிலும் நக்சல்பாரிகளை வளர்க்கப்பார்க்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். ஆனந்த் டெல்டும்டே புரட்சியாளர் அம்பேத்கரின் பேத்தியின் கணவர், பிரகாஷ் அம்பேத்கரின் தங்கையை திருமணம் செய்தவர். ஐஐடி உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இடது சாரி சிந்தனையாளர்.அவருடைய உடன்பிறப்பு ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாதரமற்றது என்பதால் தான் விடுதலை செய்யபட்டுள்ளார்.

நீதிமன்ற அனுமதியுடனே அவர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஆனந்த் டெல்டும்டே வை பல நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். அவரை தீவிரவாதி முத்திரை குத்தி அந்நியப்படுத்துவது அநாகரிகமான அரசியல். பாஜக இது போன்ற அரசியலை தமிழ்நாட்டிற்கு வடக்கே வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியுள்ளார்.

From around the web