கார்த்திகேய சிவசேனாபதி, மதிவதினி பங்கேற்ற ஐம்பெரும் விழா!
திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நத்தக்கடையூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,. குடியரசு இதழ் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101-வது பிறந்தநாள் விழா, தளபதி அர்ச்சுணன் மன்றாடியார் 101-வது பிறந்தநாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 92-வது பிறந்தநாள் விழா என ஐம்பெரு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழாசிரியர் கு.தெய்வசிகாமணியின் தொண்டறச் சிறப்பு விழாவாகவும் நிகழ்வின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழர் மரபு, சமூக நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவர் இல. பத்மநாபன்* ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் முத்து முருகேசன் தலைமை தாங்க வரவேற்புரையை மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி* நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார் துவக்க உரையாற்ற, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, சிறப்புரையாற்றினார்.