கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்.. இதுவரை 8 பேர் கைது

 
Kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த  18-ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதேபகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசாா், அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

Kallakurichi

அதில் அவா்கள் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சின்னதுரை (45) என்பவாிடம் இருந்து சாராயம் வாங்கி விற்பனை செய்தது தொியவந்தது. இதையடுத்து சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூா் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொடா்ந்து இச்சம்பவத்தில் தொடா்புடைய சாகுல் ஹமீது என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மதுக்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் வாங்கி வந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாதேஷ் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

Police

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சட்டவிரோதமாக சாராயத்தை சப்ளை செய்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இதுவரை இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

From around the web