கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்.. வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

 
Karunanidhi Karunanidhi

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

Chennai

இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாணயத்தைப் பெற்றுக் கொண்டார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் கருணாநிதி உருவத்துடன் அவர் கையெழுத்திலான ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

From around the web