கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா.. இபிஎஸ், அண்ணாமலைக்கு அழைப்பு

 
Karunanidhi Karunanidhi

சென்னையில் கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18-ம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று, கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

Rajnath Singh

விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

Invitation

இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு வீடு தேடி சென்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

From around the web