சாலை விபத்தில் நீதிபதி மகள் துடிதுடித்து பலி.. சென்னையில் அதிர்ச்சி!

 
Accident

சென்னையில் நீதிபதியின் மகள் விபத்தில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் வேலூரில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அறிவரசி (21). இவர், வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி தரமணி, சட்ட பல்கலைக்கழகத்தில், 4ம் ஆண்டு படித்து வந்தார்.

dead-body

இவருடன், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது பஷீர் (21) என்பவரும் படித்து வந்தார். இருவரும், நேற்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். முகமது பஷீர், வாகனத்தை ஓட்டினார். இவர்களுடன், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேறொரு ஜோடியும் சென்றது.

ஈ.சி.ஆர் சாலையில் ஒருவரை ஒருவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஈஞ்சம்பாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த முகமது பஷீர் வாகனம், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி, விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அறிவரசி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Police

காயமடைந்த முகமது பஷீர், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அறிவரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web