பத்திரிக்கையாளர்கள் போன் பறிமுதல்? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

 
தமிழகத்தின் 2வது தலைநகர் அமைச்சர்களின் கருத்து! அரசாங்கத்தின் முடிவு கிடையாது!முதல்வர் எடப்பாடி விளாசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வழக்கில் பத்திரிக்கையாளர்களின் போன்கள் மாநில அரசால் பறிமுதல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி , வழக்கை உடனடியாக சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

”அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது , யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!  யார் அந்த சார் என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 




 

From around the web