TNPSCயில் மாதம் ரூ.1,30,800 சம்பளத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க!

 
TNPSC

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் தமிழ் சமூக வழக்குப் பணி நிபுணர் மற்றும் தமிழ்நாடு சிறைச்சாலையின் கீழ்நிலைப் பணியில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் சமூக வழக்குப் பணி நிபுணர் பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் 21.10.2023 வரை மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்: Mass Interviewer & Social Case Work Expert

காலிப்பணியிடங்கள்: 2

jobs

கல்வி தகுதி:

Mass Interviewer  - B.A or B.Sc. in Anthropology or Sociology or Economics or Home Science or Social Work

Social Case Work Expert - Post graduate Degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Andragogy அல்லது degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology அல்லது other degree with diploma in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

  • Computer Based Test (CBT)
  • Certificate Verification

application

சம்பள விவரம்:

  • Mass Interviewer – ரூ.19,500 - 71,900
  • Social Case Work Expert – ரூ.35,600 -1,30,800

விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150 (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 21.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2023

From around the web