ராத்திரி பூட்டிய ஏசி அறையில் ஜெல்சா.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய காவலர்கள்.. டிஎஸ்பி அதிரடி!

 
Illegal

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அருகே உள்ள ஆரோக்கிய நாதபுரம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு எஸ்.பி தலைமையின் கீழ் கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

எஸ்.பி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிபவர் காவலர் வினீத். இவருக்குத் திருமணமாகிவிட்டது. குத்தாலம் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி அலுவலகத்திலுள்ள ஓய்வு அறையில் இரவு நேரத்தில் இருவரும் கதவைப் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

mayiladuthurai

இது குறித்த தகவல், மற்றொரு போலீஸ் மூலமாக டி.எஸ்.பி ஒருவருக்குச் சென்றிருக்கிறது. உடனே டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று பார்த்திருக்கிறார். அறையின் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டு இருந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி கதவைத் தட்டியிருக்கிறார். கதவு திறக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அடுத்த சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. வினீத்தும், ரேகாவும் உள்ளே நின்றிருந்து இருக்கின்றனர். இதைப் பார்த்த டி.எஸ்.பி., எஸ்.பி அலுவலகத்தில் செய்கின்ற வேலையா இது எனச் சத்தம் போட்டிருக்கிறார். ‘சாரி சார்... தெரியாம செய்துவிட்டோம். இதைப் பெரிதுபடுத்தாதீங்க’ என இருவரும் கெஞ்சியிருக்கின்றனர். இந்த விவகாரம் எஸ்.பி மீனாவுக்குச் செல்ல அவர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

suspend

இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குத்தாலம் காவல் நிலையத்தில் இருந்து இரவுப் பணியை முடித்துவிட்டு கிளம்பிய ரேகா, பேருந்தில் மயிலாடுதுறைக்குச் சென்று இறங்கியிருக்கிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வினீத், தன் இரு சக்கர வாகனத்தில் ரேகாவை அழைத்துக்கொண்டு எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று அங்கே இருவரும் தனிமையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து பணியில் ஒழுங்கீனமாகவும், தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி மீனா உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web