கீரனூர் அருகே சங்கலி கருப்பர் கோவிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு.. 13 வயது சிறுவன் உள்ளிட்ட 32 பேர் காயம்!!

 
Pudukottai

கீரனூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 13 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூர் அருகே உள்ள லட்சுமணபட்டியில் சங்கலி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அப்பகுதியில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்று வருவது வழக்கம். 

Jallikattu

இந்த வருடத்திற்கான புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள் என பல்வேறு விதமான பரிசுப் பொருட்கள் ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டியினரால் வழங்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கு பெற்றது. இந்த நிலையில் திரளான மக்கள், ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

Pudukottai GH

இந்த போட்டியில் 13 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

From around the web