ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்... குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை!!

 
1000

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் ஜூன் 3-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசிடம் போதிய நிதி இல்லாததால், ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்த நிலையில், கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார்.

இந்நிலையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார்.

MKS

அதன்படி, ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது. அதன்படி அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும். 

1000-rupees-for-ration-card

அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது

From around the web