கிண்டல் தான்.. ஆனால் உண்மை இருக்கே! அதிமுக பாஜக உறவு குறித்து பத்திரிக்கையாளர் பிரகாஷ்!!

நேற்றைய முந்தைய நாள் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் சென்னை திரும்புவதற்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமியை கலாய்க்கும் வகையில் புதிய பாடல் ஒன்றை வீடியோக்கள் இணைத்து வெளியிட்டு விட்டனர்.
அன்பே மோடி என்று தொடங்கும் இந்தப் பாடல் சமூகத்தளங்களில் பரப்பரப்பாக பரவி வருகிறது. மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் இந்தப் பாடலை பகிர்ந்துள்ளார்.”இனி இந்தப்பாட்டு பல வடிவங்களில் தமிழகம் முழுவதும் கேட்கும். எடப்பாடியால் என்ன விளக்கம் சொல்ல முடியும். இது கிண்டல் பாட்டு.. ஆனால் பாதி உண்மை இருக்கு” என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ்.
அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பாடாய் படுத்திடுவாங்க போலிருக்கே!
இனி இந்த பாட்டு பல வடிவங்களில் தமிழகம் முழுவதும் கேக்கும்!என்ன விளக்கம் சொல்ல முடியும் எடப்பாடியால் !இது கிண்டல் பாட்டு! ஆனால் பாதி உண்மை இருக்கு! pic.twitter.com/JOyUgtCaQ9
— Damodharan Prakash (@sathrak1967) March 26, 2025