12 வருடங்கள் ஆயிடுச்சி.. இதோ நான் வந்துட்டேன்.. பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு, நீலகிரி மலைப்பகுதி முழுவதும் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பரவலாக வளரும் ஒரு வகை செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால் தென்னிந்தியாவில் இம்மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மலைத்தொடரில் நீலக்குறிஞ்சிகள் அதிகளவு பூப்பதால் நீலகிரி மலை என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
இவ்வகை குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இக்குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக் குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக் கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடு களில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்திய நாட்டில், மட்டுமே காணப்படுகின்றன.
குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர் கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை வகுப் பில் மலையும் மலை சார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பைக் காட்டுகின்றன. இவ்வகை நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகள் 30 முதல் 60 செமீ உயரம் வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோவில் மணிகளின் உருவம் கொண்டவை.
#Watch | நீலகிரி மலைப்பகுதிகளை அலங்கரித்துள்ள குறிஞ்சி மலர்களின் ரம்மியமான காட்சி!
— Sun News (@sunnewstamil) September 15, 2024
12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிகளால் மலை முழுவதும் போர்வை போர்த்தியதுபோல் நீல வண்ணத்தில் காட்சியளிக்கிறது#SunNews | #NeelaKurinji | #Nilgiris pic.twitter.com/SuZKEHKtWP
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமத்தைச் சுற்றியுள்ள கொரனூர், எடக்காடு, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயரமான மலை தொடர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்ககூடிய இந்த நீலநிற குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனை கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்க ளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், தாவர வியல் துறை பயிலும் மாணவ, மாணவிக ளும், புகைப்படக் கலைஞர்களும் இப்பகு திக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.