தண்ணி காட்டுன மாநிலம் தான்... விஜய்க்கு திராவிடர் கழகம் மதிவதனி அட்வைஸ்!!

நேற்றைய பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய் குறிப்பிட்ட பல விஷயங்களை திமுக அரசு ஏற்கனவே செய்து வரும் திட்டங்களில் உள்ளது தான். ஆனால் அவர் என்னமோ புதுசா கொண்டு வரப்போறத் திட்டங்கள் மாதிரி பேசியிருந்தாரு. அதில் முக்கியமா பிரதமர் மோடியைப் பார்த்து தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டின மாநில என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாட்டு நலனுக்காக ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது தந்தை பெரியாரின் திராவிடர் கழகமும் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கலைஞர் கட்டிக்காத்த திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஆட்சியும் தான் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நடிகர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகம் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கருத்து தெரிவித்துள்ளார்.
”ஆமா சார் பல பேருக்கு தண்ணி காட்டிய மாநிலம். பிரதமருக்கும் தண்ணி காட்டும் மாநிலம். நீங்க கட்சி ஆரம்பிக்கிறதுக்கு நூறு வருசம் முன்னாடி இருந்து தண்ணி காட்டும் மாநிலம். பார்ப்பனரோடு கூட்டு சேர்ந்து அழிக்க வந்த பலருக்கும் தண்ணி காட்டிய மாநிலம். 2026-இல் நீங்கள் யார் என்பதை அடையாளம் கண்டு தண்ணி காட்ட இருக்கும் மாநிலம். தண்ணி காட்டிய மாநிலம் என்பதோடு இன்னொரு வரி சேர்த்துக்கங்க, "திராவிடம் என்ற சித்தாந்தத்தால் ஆரியத்திற்கும் அதன் கூலிகளுக்கும் தண்ணி காட்டிய மாநிலம்!". என்று எக்ஸ் தளத்திலும் ஃபேஸ்புக் தளத்திலும் பதிவிட்டுள்ளார் மதிவதனி.