10வது மாடியில் இருந்து குதித்த IT ஊழியர்.. உடல் சிதறி பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

 
Chennai

துரைப்பாக்கத்தில் 10வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவில் விசத்து வந்தவர் புவனேஷ் (27). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பயணியாற்றி வருகிறார். இவரது ஷிப்ட் டைம் மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 1:30 மணிவரை ஆகும். பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு புவனேஷ் பணிக்கு வந்துள்ளார்.

பின்னர் இடைவேளை நேரத்தில் வழக்கம்போல நண்பர்களுடன் 10வது மாடிக்கு சென்ற அவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜன்னலை திறந்து வெளியே குதித்துள்ளார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழநதார்.

jump

உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புவனேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வங்கி உட்பட பல்வேறு இடங்களில் ரூ.30 லட்சம் வரை புவனேஷ் கடன் பெற்றிருப்பதும், ஷேர் மார்க்கெட் உள்பட பல்வேறு வழிகளில் முதலீடு செய்து பணத்தை இழந்ததும் தெரியவந்துள்ளது.

Police

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்தால் உயிர் போகுமா? என தனது நண்பர்களிடம் விளையாட்டாக பேசி வந்த நிலையில், அவரது தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web