அத்தை குடும்பம் ரத்த சொந்தம் இல்லையா? அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி!!
பாஜகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா, ஊடகங்களிலும் எக்ஸ் தளத்திலும் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அண்மைக்காலமாக பாஜக தலைவர் அண்ணாமலையை நோக்கி தொடர்ந்து கேள்விகள் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருச்சி சூர்யா கூறியுள்ளதாவது,
அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்! லண்டன்ல இருந்து வந்த உடனே ஒரே நாள்ல சென்னை விமான நிலையத்திலும் பின்னர் கோவை விமான நிலையத்திலும் பேட்டி கொடுத்தீங்க. இனிமேல் செத்தாலும் விமான நிலையத்துல பேட்டி தர மாட்டேன்னு லண்டன் போறதுக்கு முன்னாடி சொன்னத நீங்களே மறந்துட்டீங்க போல.
சொன்னதை மறப்பது உங்களுக்கு பழக்கம்தானே. பேட்டி கொடுத்தது பற்றி எனக்கு அக்கறையில்ல, அதுல என்ன மேட்டர்னா மின்சார துறையில் நடந்த ₹397 கோடி ட்ரான்ஸ்பார்மர் ஊழல் பற்றி இரண்டு நாள்ல விரிவா தனியா ஒரு பேட்டி தர்றேன்னு சொன்னிங்க. 26 நாளாச்சு ஏன் தர்ல. பதிலுக்கு நான் கேள்வி கேட்கட்டுமா ?
கேள்வி எண்.8 உங்க தந்தையின் உடன் பிறந்த சகோதரி, அதாவது உங்கள் அத்தை குடும்பத்தின் இரண்டு நிறுவனங்கள் அந்த பட்டியில்ல இருக்கிறது என்ற பயமா? சராயு என்பவர் யார்? அத்தையின் மருமகள் தானே? 1. Associated Transformers Private Limited 2. Sarayu Engineering அத்தையின் குடும்பம் உங்கள் ரத்த சொந்தம் என்ற கணக்கில் வருமா வராதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருச்சி சூர்யா.
அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்!
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) December 26, 2024
லண்டன்ல இருந்து வந்த உடனே ஒரே நாள்ல சென்னை விமான நிலையத்திலும் பின்னர் கோவை விமான நிலையத்திலும் பேட்டி கொடுத்தீங்க.
இனிமேல் செத்தாலும் விமான நிலையத்துல பேட்டி தர மாட்டேன்னு லண்டன் போறதுக்கு முன்னாடி சொன்னத நீங்களே மறந்துட்டீங்க போல. சொன்னதை மறப்பது… pic.twitter.com/QB7xVTAUx2