பாஜகவுடன் விஜய் க்கு டீல் முடியல்லியோ? அர்ஜுன் சம்பத் இந்த போடு போடுறாரே?

 
Arjun-Sampath Arjun-Sampath

கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் க்கு பாஜக தரப்பில் நெருக்கடி தரப்பட்டதாகவும், தங்கள் கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. கரூர் சம்பவத்தில் உடனடியாக விஜய் க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தவர்கள் பாஜகவினரும் அதிமுகவினரும் தான்.

ஆனால் அண்ணாமலையின் பேச்சில் முதலில் மாற்றம் தெரிந்தது. நான் என்ன விஜய்க்கு ப்ரோமோஷன் பண்ணுகிறேனா என்று  செய்தியாளர்களிடம் மிகவும் எரிச்சல் பட்டார். அது முதலாகவே விஜய் பாஜக அணிக்கு செல்லமாட்டார் என்ற யூகங்கள் கிளம்பியது. காங்கிரஸ் கட்சியுடன் தான் விஜய் பேசுகிறார். திமுக அணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய் யுடன் கூட்டணி வைக்கும் என்ற தகவல்கள் தற்போது வந்தவண்ணம் உள்ளது.

இதை உறுதி செய்வது போல் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மிகவும் காட்டமாக விஜய் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். விஜய் யின் கட்சியான் தமிழக வெற்றிக் கழகத்தின்  அதிகாரப்பூர்வமான பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். விஜய் யை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சீறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

பாஜக தரப்பினர் கோபப்படுவதைப் பார்த்தால், விஜய் அவங்க பேச்சுக்கு ஒத்து வரவில்லை என்ற தோற்றம் உருவாகியுள்ளது. என்ன நடக்கப் போகிறது என்று டிசம்பருக்குள் தெரிந்து விடும்.

From around the web