விஜய் பொய் பேசுகிறார்? சாடிய அண்ணாமலை!!

நேற்று மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது. தேர்தல் வியூக அமைப்பாள பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் விஜய் பேசிய கருத்துகளுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவையில் பாஜகவின் புதிய அலுவலகம் திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை.
அப்போது, ”தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசும்போது, மத்திய, மாநில அரசுகளைக் குறை கூறியுள்ளார். விஜய் குழந்தைகளுக்கும், அவர் நடத்தி வரும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மூன்று மொழி. ஆனால், தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. இது என்ன நியாயம்? யாரும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. எனவே, மேடையில் பொய் கூறுவதை விஜய் தவிர்க்க வேண்டும். மேடையில் பேசுவதை முதலில் அவர் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்து அதிகரிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசிடம் பெற்றுத்தரப்படும். மக்கள், கட்சித் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள்தான் எங்களது தேர்தல் வியூக நிபுணர்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.