காய்கறிகளின் விலை உயர்ந்ததா.? கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை நிலவரம் என்ன?

 
Koyambedu

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Koyambedu Market

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை 100 கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Koyambedu Market

புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 80 முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web