திமுக கூட்டணி கன்ஃபர்ம்? விஜய் யை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த்!!

 
premalatha premalatha

கரூர் துயரச் சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவினரும் விஜய்க்கு ஆதரவாகவும், திமுக அரசுக்கு எதிராகவும் பேசி வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

“திரைப்பட படப்பிடிப்புக்கு விஜய் சரியான நேரத்திற்கு வந்து விடுவார் விஜய். கரூர் கூட்டத்தில் விஜய் செய்த முதலாவது தவறு லேட்டாக வந்தது. தனக்கு பாதுகாப்புக்கு என பவுன்சர்கள் வைத்துள்ள விஜய் பொதுமக்கள், பெண்கள் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு செய்தார். யூனிஃபார்ம் போட்டு 10 ஆயிரம் பேரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாமா? கயிறு கட்டி கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டாமா?

உங்களை நம்பி வருகிறார்களே, அவர்களுக்கு தண்ணி கொடுக்க வேண்டாமா? சாப்பாடு கொடுக்க வேண்டாமா?  அதனால் தான் அத்தனை மயக்கம் உயிரிழப்பு. இது விஜய் செய்த மூன்றாவது தவறு.

நான்காவதாக விஜய் செய்த தவறு உள்ளே பூந்துகினு  பஸ்ஸுக்குள் ஒளிந்து கொண்டது. பஸ் மேலே நின்று வர வேண்டியது தானே. கேப்டன் என்றாவது இப்படி ஒளிந்து கொண்டு இருந்தாரா? எப்பவும் மக்களை பார்த்துக் கொண்டு தான் வருவார்.

சம்பவம் நடந்த உடன் ஃப்ளைட்டில் வீட்டுக்குச் சென்ற து தப்பு. இன்று வரையிலும் வந்து பார்க்காதது தப்பு. என்ன செய்துவிடுவார்கள்? கைது செய்தால் செய்யட்டுமே” என்று பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகப் பேசியுள்ளார்

From around the web