புறக்கணிக்கப்படுகிறாரா செங்கோட்டையன்! எங்கே செல்கிறது இந்த பாதை?

 
5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு – செங்கோட்டையன்!

30 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பொதுவாக இத்தகைய நியமனங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள் பெயர்கள் தான் இடம் பெறும். ஆனால் செங்கோட்டையனுக்கு எந்த மாவட்டமும் ஒதுக்கப்பட வில்லை.

செங்கோட்டையன் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை கூட்டத்திற்குச் சென்றது எடப்பாடி பழனிசாமிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்தக்கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினரான தம்பித்துரைக்கு அழைப்பு சென்ற போதும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் செங்கோட்டையன் சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குச் சென்றது, அவர் திமுகவுடன் இணக்கமாகச் செல்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் மூத்த தலைவர் இளைய தலைவர் என்றெல்லாம் கட்சியில் இல்லை. நான் ஒரு கடைமட்டத் தொண்டன் என்றே தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தன்னுடைய ஆதரவாளர்களை மாவட்டம் தோறும் சந்தித்து வருவதாகவும் தெரிகிறது. ஒரு பெரும் கூட்டத்துடன் திமுகவில் ஐக்கியமாகி மாநில அளவில் பொறுப்பு பெற்றுவிடலாம் என்று செங்கோட்டையன் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் காலத்திலேயே ப.உ.சண்முகம், நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறிச் சென்றனர். சென்ற இடத்தில் உயரிய பொறுப்புக்களையும் பெற்றனர். இதையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்தவர் தான். யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அதனால் கட்சிக்கு என்ன பலன் என்பதையெல்லாம் உணர்ந்தவரும் கூட.

கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றுவதற்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார் என்பதால் முதல்வர் தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 1975ல் எம்ஜிஆருடன் தொடங்கிய செங்கோட்டையனின் அரசியல் பாதை அறிவாலயம் நோக்கிச் செல்வதாகத் தான் தெரிகிறது

From around the web