தமிழுக்காகப் போராடுவது ஏளனமாக இருக்கிறதா? நிர்மலா சீத்தாராமனுக்கு கனிமொழி கண்டனம்!!

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாடு எவ்வளவு வரி செலுத்துகிறது எவ்வளது திரும்ப் பெறுகிறது என்ற கேள்வியே தவறானது. எங்கிருந்து அந்த கணக்கு வருகிறது என்றே தெரியவில்லை.
தமிழ்நாடு ஒன்றிய அரசிடம் கேட்பது போல் தமிழ்நாட்டு நகரங்கள் தமிழ்நாட்டு அரசிடம் கேட்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியவர், கொஞ்சம் ஏளனமா சொல்ல வேண்டுமென்றால் கோவில்பட்டிக்காரங்க கிட்டே கோயமுத்தூர் காரங்க சொல்லனும். நாங்க தான் வருமானம் ஈட்டுறோம். எங்களுக்கு என்ன செலவு பண்றீங்க. கோவில்பட்டி எக்கேடு கெட்டா எங்களுக்கு என்ன என்று சொல்லனும் எனப் பேசியிருந்தார்.
நிர்மலா சீத்தாரமனின் இந்தப் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
”நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!” என்று கனிமொழி எம்.பி எக்ஸ் தளத்தில் நிர்மலா சீத்தாராமனின் பேச்சு வீடியோவுக்கு பதிலளித்துள்ளார்.