இந்தியிசை யா? கடும் கோபத்தில் தமிழிசை சவுந்தரராஜன!!

 
Tamilisai

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி முருகன் கோவிலுக்குச் சென்ற பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். தன்னை யாராவது இந்தியிசை என்று சொன்னால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று ஆவேசப்பட்டார்.

மத்திய அரசு அறிவிக்காத தொகுதி மறுவரையறைக்கு குழுவை அனுப்பியுள்ள தமிழக முதல்வர் காவிரி பிரச்சனை - மேகதாது அணை விவகாரத்தில் ஏன் குழுவை அனுப்பி தீர்வு காண முயற்சிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள்தான் என்று தெரிவித்தார்.

மேலும்,  2 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கு கொடுப்பதாக தெரிவித்தால் இல்லாத இந்தி தினத்தை எடுத்துக்கொண்டு இரு மொழிக் கொள்கைதான் வேணும் என்கிறார்கள். மூன்று மொழி படிப்பது எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் போது மத்திய அரசு பணம் தர தயாராக இருக்கும்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறையில் வட மாநிலங்களின் எண்ணிக்கை அதிகமாகும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்று தான் கூறி வருகிறார். அது குறித்து தமிழிசையோ பாஜகவினரோ எந்தக் கருத்தும் சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 70 ஆண்டு காலத்திற்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாட்டிற்கு இப்போது தான் முதன் முறையாக, மும்மொழிக் கொள்கையைக் காட்டி கல்வி நிதியை நிறுத்தி உள்ளார்கள் என்பதும் முக்கியமானதாகும்

From around the web