முதலமைச்சராக இருக்க தகுதியுடன் இருக்கிறாரா? அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு!!

நேற்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் முதலமைச்சராக இருக்க அருகதையற்றவர் என்று சொன்ன நிலையில் இன்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை முதலமைச்சராக இருக்க தகுதியுடன் உள்ளாரா (Fit to Lead Tamilnadu) என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்தொகுதி சீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சமூட்டுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
2026ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் நடக்க உள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை திறம்பட கடைப்பிடித்த மாநிலங்கள் இதனால் பாதிப்படையும். இதே எண்ணிக்கையில் பாராளுமன்ற தொகுதிகள் நீடித்தால் மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்கும். எண்ணிக்கையை அதிகரித்தால் கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக 10 தொகுதிகளே கூடுதலாக கிடைக்கும். அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து தமிழ்நாடு உரிமைக்காகப் போராடுவோம், மார்ச் 3ம் தேதி தலைமைச் செயலகத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் அச்சமூட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சருக்கு யாரோ டெல்லியிலிருந்து சொன்னார்களாம. யாரென்று எனக்குத் தெரியாது. 543 தொகுதிகள் 800க்கும் மேற்பட்டதாக அதிகரிக்கும். மத்திய அரசு எங்கேயும் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லவில்லை. மக்கள் தொகையை மட்டுமே மறுசீரமைப்புக்கு பயன்படுத்தப் போவது கிடையாது.
அமெரிக்க அதிபரின் மனநிலையை ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து அறிக்கை வெளியிடுவார்கள், முதல்வரின் மனநிலை குறித்து . அவர் முதலமைச்சராக இருக்க தகுதியுடன் உள்ளாரா என்று எனக்கு சந்தேகம் உள்ளது. யாருமே சொல்லாததை , யாரும் கருத்து சொல்லத நிலையில் எதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.