விஜய் யை கை கழுவுகிறாரா பொதுச் செயலாளார் புஸ்ஸி ஆனந்த்? 

 
Vijay Bussy Anand Vijay Bussy Anand

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் ஆளாக வந்து இருந்து கட்சியை தொடங்க உறுதுணையாக இருந்து, பொதுச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் புஸ்ஸி தொகுதியின்  கடைசி எம்.எல்.ஏ.வாக 2006ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

விஜய் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றும் பணியை செய்து வந்த புஸ்ஸி ஆனந்துக்கு போட்டியாக ஆதவ் அர்ஜுனாவின் வருகை இருந்தது. விஜய் யின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் செயலே கரூரில்  துயரச் சம்பவம் நடந்துள்ளது. விஜய் க்கு பெரும் நெருக்கடியையையும் உருவாக்கியுள்ளது.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான புஸ்ஸி ஆனந்திற்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. திமுக அரசு சதி செய்து விட்டது என்று விஜய் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க, நீதிமன்ற்த்தில் விபத்து நடந்ததற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திமுக சதி செய்தது என்று எந்த இடத்திலும் நீதிமன்றத்தில் ஆனந்த் தரப்பில் சொல்லப்படவில்லை.

மேலும், கூட்டத்தை ஏற்பாடு செய்தது கரூர் மாவட்டச் செயலாளர் தான், அவரை ஏற்கனவே போலீஸ் கைது செய்து விட்டது. . எனக்கும் கூட்ட ஏற்பாட்டிற்கும் சம்மந்தம் இல்லை.என்னை இந்த வழக்கில் ஏன் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். விஜய் சொன்ன கருத்துக்கு எதிராக   நீதிமன்றத்தில் இது விபத்து என்று புஸ்ஸி ஆனந்த் பல்டி அடித்துள்ளார். 

கைதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புஸ்ஸி ஆனந்த் நீதிமன்றத்தில் கூறியது, விஜய் மீது அவருக்கான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகுவதாக உள்ளது. நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைதுக்கு பயந்தே நீதிமன்றத்தில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று சொன்ன புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரித்தால் அப்ரூவராகக் கூட மாறினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 

From around the web