ஒரே அணியில் திரளுகிறதா அதிமுக, பாமக, பாஜக, நாதக, தவெக? மூத்த பத்திரிக்கையாளர் பதில்!!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்காக நீதிகேட்டு எதிர்க்கட்சிகள் தொடர் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன. அதிமுகவின் போராட்டத்தைப் பாராட்டி அண்ணாமலை பதிவிட்டார், அண்ணாமலையை சீமான் பாராட்டுகிறார். ஆளுநரை விஜய் சந்திக்கிறார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் இந்த விவகாரத்தில் பாராட்டிக் கொள்வதால் புதிய கூட்டணி வர வாய்ப்புள்ளதா என்று மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷிடம் நேர்காணலில் கேட்கப்பட்டது.
காவேரி பிரச்சனையின் போது திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என கட்சிகள் ஒரே மேடையில் ஒன்றாக போராட்டம் நடத்தினார்கள். அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது கூட்டணிக்கான வியூகம் இல்லை. அதிமுக, பாமக், பாஜக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.