வெம்பக்கோட்டையில் இரும்பு கண்டுபிடிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சி!!

 
Vembakottai

கீழடி அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகிறது. இன்று வெம்பக்கோட்டை நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இரும்பு மற்றும் சுடுமண்ணால் ஆன பதக்கம் கிடைத்துள்ளது.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு “ விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 

From around the web