குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பு... சீர்வரிசையோடு வந்த வடமாநில தொழிலாளர்கள்..! நெகிழ்ச்சி சம்பவம்!

 
Chennai

பூவிருந்தவல்லி அருகே நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை குடும்ப உறுப்பினராக பாவித்து முக்கியத்துவம் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வெளியாகின. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே அச்சம் உண்டானதால் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புவதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், பூவிருந்தவல்லி அருகே நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை குடும்ப உறுப்பினராக பாவித்து முக்கியத்துவம் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா, பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்களாக பாவித்து பத்திரிக்கை வைத்து, அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அழைப்பை ஏற்றுக்கொண்ட 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சகோதரத்துவ எண்ணத்தை வெளிகாட்டும் வகையில், கையில் சீர்வரிசை தட்டுகளுடன் வந்து விழாவையே அசத்தினர். இது விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

chennai

இதைத்தொடர்ந்து உறவினர்கள் போல் பெண்ணிற்கு நலங்கு வைத்து, மலர்தூவி ஆசீர்வாதம் அளித்தனர். அதேபோல் விழாவிற்கு வந்திருந்த அனைத்து வட மாநில தொழிலாளர்களும் முக்கியத்துவத்துடன் வந்திருந்தவர்களுக்கு உணவை பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். 

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web