தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! யாரும் போராட மாட்டாங்களா?
சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்நாடு மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்குப் பதிலாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்,
சீமான் பங்கேற்ற இந்த விழா மேடையில் அரசியல் தலைவர்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசியதற்காக ஊடகவியலாளர் செந்திவேல் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்த பபாசி அமைப்பும், விழாவை நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனமும் இதற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை, தாங்கள் பொறுப்பில்லை என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். யாரும் பொறுப்பேற்று நேரடியாக மன்னிப்பு கேட்கவும் இல்லை. சீமான் தரப்பிலும் எந்த விளக்கமும் இல்லை.
இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை. இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆளுங் கூட்டணி கட்சிகள் இந்தப் பிரச்சனை குறித்து அவையில் கேள்வி எழுப்புவார்களா? முதலமைச்சர் விளக்கம் அளிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.