இந்தியாவிலேயே முதல் கண்ணாடி பாலம்! முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடித் திட்டம்!!

 
kumar glass bridge

குமரி முனையில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக கலைஞர் உருவாக்கிய திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டை கொண்டாடும் வகையில் இரண்டு நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. 

திருவள்ளுவரை பேராசன் என்று அழைக்கும் முதலமைச்சர் குமரி முனை வள்ளுவர் சிலைக்கு பேரரறிவுச் சிலை (Statue of Wisdom) என்று பெயர்சூட்டி கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார். தூத்துக்குடி விழாக்களை முடித்து விட்டு கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படகும் மூலம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூழ வள்ளுவர் சிலைக்கு வந்தார். அங்கு கல்வெட்டை திறந்து வைத்த பின, திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார்.

இந்தப் பாலத்தில் நடந்து சென்று விவேகானந்தர் பாறையில் உள்ள ஒற்றை மூக்குத்தி பகவதி அம்மன் கோவிலையும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட முடியும். இனி மேல் ஒரே படகுப் பயணம் மூலம் இரண்டு இடங்களையும் பார்வையிட்டு வந்து விடலாம். இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம் சுற்றுலா செல்பவர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாகவும் உள்ளது. கடல் நீரை காலுக்கடியில் பார்த்துக் கொண்டே நடக்கும் வகையில் உள்ளது இந்தப் பாலம். காலுக்கடியில் தண்ணீரைப் பார்க்க விரும்பாதவர்கள் பக்கவாட்டில் உள்ள பாதையில் செல்லமுடியும்.

தென் மாவட்டங்களிலிருந்து திருவள்ளுவர் சிலையையும் கண்ணாடிப் பாலத்தையும் பார்வையிட ஏற்கனவே மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். மேலைநாடுகளில் மட்டுமே இத்தகைய கண்ணாடிப் பால சுற்றுலாத் தளங்கள் உள்ள நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

 


 


 

From around the web