தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலெர்ட்!

 
rain

தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain

அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain-Report

அதன்படி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

From around the web