தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

 
Rain

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளநாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

முன்னதாக தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

From around the web