இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கு ரூ. 1,000 - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

 
Udhayanidhi

5 மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ம் தேதி காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. 

அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், கருங்கல்பாளையம், எஸ்கேசி சாலை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விட்டால் ஒவ்வொரு மாதமும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வந்து செல்வதாக உறுதியளித்தார். மேலும், இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Erode

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக வேட்பாளர், அவர் செல்லும் இடமெல்லாம் அவரை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அவரை துரத்தி அடிக்கின்றனர். அவர் என்ன பிரச்சாரம் செய்கிறார். மீசை இருக்கா? என்று கேள்வி எழுப்புகிறார். ஏன், ஷேவ் பண்ணி விடுவார் போலிருக்கிறது. வேஷ்டி கட்டுறீங்களா என்று கேட்கிறார். அவருக்கு பெரிய மீசை இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அந்த மீசை என்ன செய்திருக்கிறது.

2027-ம் ஆண்டு இந்திய வராலாற்றிலேயே தமிழ்நாடு அரசின் தலைமை செயல்கத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. முதல்முறை இது. அப்போது அவர் மீசை என்ன செய்துகொண்டிருந்தது? தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது மீசை என்ன செய்துகொண்டிருந்தது? எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னீர்களே?

ஜெயலலிதா இறந்த பிறகு, கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்ததே அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மீசை என்ன செய்தது?   மூன்றரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். மக்கள் அவரை தேர்ந்தெடுத்தார்களா? நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா? அதிமுகவிற்கு வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. 5 லட்சம் கோடி கடன் இருக்கு.

1000-rupees-for-ration-card

தமிழ்நாடு மாநில உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு பறித்தபோது உங்க மீசை என்ன செய்தது? உங்க மீசை ஒன்றை மட்டும் தான் செய்திருக்கிறது. இரண்டு பெண்மணிகளின் ஷூவிற்கு பாலிஷ் போட்டது மட்டும்தான்.  இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் தலைவராகி விடுவார். ஓ.பன்னீர்செல்வம் எதாவொரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார். 

எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார் என்பதை மறந்துவிடாதீர்கள். இவர் மீசையைப் பற்றி பேசுகிறார். கொரோனா காலத்தில் 50 கோடி கடன் மட்டும்தான் கிடைத்தது.

From around the web