தலைமையும் நானே.. முதலமைச்சரும் நானே... எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி!!

 
EPS EPS

நடிகர் விஜய் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று மீண்டும் அறிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளித்தார் விஜய்.

விஜய் யின் இந்த அறிவிப்பு அதிமுக அணிக்கு பெரும் பின்னடைவாக கூறப்பட்ட நிலையில், அதிமுக தலைவர்கள் விஜய் க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்பதை மக்களிடம் தெளிவு படுத்த வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இதை உறுதிபடுத்தும் விதமாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அமைந்துள்ளது.

”தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக  கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என அஅமித்ஷாவே கூறிவிட்டார். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அமித் ஷா அறிவித்துவிட்டார்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 தேர்தலில் திமுக, அதிமுக, தவெக தலைமையில் மூன்று அணியும் சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் 4 முனைப் போட்டி உறுதியாகி விட்டது. 

From around the web