ஆகஸ்ட் 2ம் நாளுக்காக காத்திருக்கிறேன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!!

 
MKS Ilayaraja

இசைஞானி இளையராஜாவின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், 

”நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!”  என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web